Friday, August 3, 2012

விதவை!

 அவளின் ,
பூவையும் பொட்டையும்
அவள் கணவன்
பலவந்தமாய் பிடுங்கிக்கொண்டான் !
பிடுங்கியதை ,
அவனின்
நிழல்படத்திற்கு  சூடிவிட்டான் !
விதவை என்ற சொல்லையும் ,
பொட்டில்லாமல் விட்டான் !!

ரோஜா!

 மலரே !
நீ ,
மலர்வதோ
காலையில் !
மறைவதோ 
மாலையில் !
வாழ்வதோ
ஆயிரம்
மனங்களில் !!

மென்மையின் கடினம்!

 பெண்ணே!
உன்னிடம் என்னை 
வெளிப்படுத்திய போது...
நீராய் குளிர்ந்த நீ ,
நெருப்பாய்  சுட்டாய் !
தென்றலாய் வருடிய நீ ,
புயலாய் சீறினாய்!
பூவாய் இருந்த நீ ,
முள்லாய்  குத்தினாய் !
மலரே!
அப்போதுதான் உணர்ந்தேன்...
உன்  மென்மையான  மனதினுள்ளும் 
இறுகிய பாறை உண்டென்பதை !!
மென்மையின் கடினத்தை !!!



மென்மை!

பெண்ணை புரிந்துகொள்ள ,
'dictionary' தேவையில்லை !
அவள் மனதை அறிய ,
'அகராதி' யும்  வேண்டியதில்லை !
நீயும் மென்மையாய் மாறு ...
அது போதும் அவளை அறிய !!

பிடிக்கும்!

 பூக்கள் பிடிக்கும் ,
வாடமலிருந்தால் !
மேகம் பிடிக்கும் ,
மழை பொழிந்தால் !
சூரியன் பிடிக்கும் ,
சுட்டெரிக்காமலிருந்தால் !
நிலவு பிடிக்கும் ,
தேயாமலிருந்தால் !
நதிகள் பிடிக்கும் ,
வற்றாமலிருந்தால் !
நட்பு பிடிக்கும் ,
பிரியாமலிருந்தால் !
வாழ்க்கை பிடிக்கும்,
துயரின்றி இருந்தால் !
மரணமும் பிடிக்கும் ,
இயற்கையாக இருந்தால் !

Thursday, August 2, 2012

முதுமை!

தேர்வு எழுதிவிட்டு ,
அதன் முடிவை
எதிர்நோக்கும்
மாணவனைப் போல் ...
தேர்தலில் நின்றுவிட்டு ,
வாக்கு எண்ணிக்கையை
எதிர்நோக்கும்
அரசியல்வாதியைப் போல் ...
படத்தை எடுத்துவிட்டு ,
வெற்றி விழாவை
எதிர்நோக்கும்
தயாரிப்பாளரைப் போல் ...
வாழ்வை முடித்துவிட்டு ,
மரண வாசலை
எதிர்நொக்கும்
நான் !!


என்னென்பேன்!

நிலவேன்றேன் ,
தேய்பிறையில் தேய்ந்து விட்டாள் !
கண்னேன்றேன் ,
கண்ணீரில் கரைந்து விட்டாள் !
பூவென்றேன் ,
வெய்யிலில் வாடிவிட்டாள் !
என்னென்பேன் ?
எப்போதும் பிரியாமல் இருப்பதற்கு ??