Thursday, June 6, 2019

அழகு!!

எதிர்பாரா நேரத்தில்,
கிடைக்கும் குழந்தையின்
முத்தம் அழகு!!
முகம் தெரியாத நபரின்,
அக்கறை கலந்த
எச்சரிக்கை அழகு!!
காலை வணக்கத்தொடு
இணைந்து கொள்ளும்
புன்னகை அழகு!!
துன்ப வேளையில்,
வார்த்தைகளற்ற மௌன
ஆறுதல்கள் அழகு!!
சின்ன அன்பளிப்பிற்கும்
நெகிழும் ஈன்றோரின்
பாசம் அழகு!!
திட்டும் போதும்,
அதில் இழையோடும்
அன்பும் அக்கறையும் அழகு!!
பாரதியும்,
பாரதியின் கண்ணம்மாவும்,
அவை திருடிச்சென்ற
நிமிடங்களும் அழகு!!
கனவுகளும் கற்பனைகளும்,
அவை கொடுத்த,
நம்பிக்கையும் அழகு!!
கடந்துவிட்ட,
குழந்தை பருவத்திற்கான,
ஏக்கங்கள் அழகு!!
வெளியே புன்னகைத்து,
உள்ளே சோகம் மறைக்கும்
முதிர்ச்சி அழகு!!
பருவத்தின் பருக்களும்,
முதுமையின் நரையும் அழகு!!
வாழ்க்கை தனக்குள்
மறைத்து வைத்திருக்கும்,
திருப்பங்களும் அவை தரும்
அனுபவங்களும் அழகு!!
ஒவ்வொரு நொடியும் அழகு!!
ஒவ்வொன்றிலும் ஓர் அழகு!!! :)