Thursday, August 2, 2012

முதுமை!

தேர்வு எழுதிவிட்டு ,
அதன் முடிவை
எதிர்நோக்கும்
மாணவனைப் போல் ...
தேர்தலில் நின்றுவிட்டு ,
வாக்கு எண்ணிக்கையை
எதிர்நோக்கும்
அரசியல்வாதியைப் போல் ...
படத்தை எடுத்துவிட்டு ,
வெற்றி விழாவை
எதிர்நோக்கும்
தயாரிப்பாளரைப் போல் ...
வாழ்வை முடித்துவிட்டு ,
மரண வாசலை
எதிர்நொக்கும்
நான் !!


என்னென்பேன்!

நிலவேன்றேன் ,
தேய்பிறையில் தேய்ந்து விட்டாள் !
கண்னேன்றேன் ,
கண்ணீரில் கரைந்து விட்டாள் !
பூவென்றேன் ,
வெய்யிலில் வாடிவிட்டாள் !
என்னென்பேன் ?
எப்போதும் பிரியாமல் இருப்பதற்கு ??

துயரம்!

இறைவா !
கல்லுக்குள் ,
ஈரத்தை வைத்தாய் !
சிப்பிக்குள் ,
முத்தை வைத்தாய் !
மண்ணுக்குள்,
வைரத்தை வைத்தாய் !
வானுள் ,
விண்மீனை வைத்தாய் !
புகையினுள் ,
நெருப்பை வைத்தாய் !
புயலுக்கு பின் ,
அமைதியை வைத்தாய் !
என்னுள் ,
மனதை வைத்தாய் !
ஆனால் மனதினுள் ,
துயரத்தை ஏன் வைத்தாய்?

புனிதம்!

நட்பு புனிதமானதுதான்,
பிரிவு இல்லாத வரை !
அன்பு புனிதமானதுதான் ,
வேஷம் இல்லாதவரை !
அரசியல் புனிதமானதுதான் ,
ஊழல் இல்லாதவரை !
பக்தி புனிதமானதுதான் ,
மூடநம்பிக்கை இல்லதவரை !
வாழ்வும் புனிதமானதுதான் ,
நம்பிக்கை உள்ள வரை !!

ஏழை!

சிலுவையில் அறைந்தால் ,
ஏசு பிரான் !
முதுகில் அடித்தால் ,
சிவா பெருமான் !
வயிற்றில் அடித்தால் ,
அவன் தான் ஏழையோ ??

வாழ்க்கை!

 பூ என்பது,
காம்பையும் செர்த்து !
நாள் என்பது ,
இரவையும் சேர்த்து !
வாள் என்பது ,
பிடியையும் சேர்த்து !
வாழ்வென்பது ,
இன்பம் துன்பம் இரண்டையும் சேர்த்து !  

கற்சிலை!

மனிதனே!
உயிரற்ரிருக்கும் 
கற்சிலையை  வடித்து ,
கடவுள் என்றாயே!!
ஏன் ?
உயிரோடிருக்கும் 
நீயும்,
கல்லாகிப்போன...
உண்மையை  
உணர்த்தவோ ??
வேடங்களை போட்டு
வேடதாரியாய் அலைந்தது போதும் !!
இனியேனும் ,
வேடங்களை கலைந்து
உணர்ச்சியுள்ள ,
மனிதனாய் மாற
முயற்சிசெய் !!