வா! வாழ்ந்து பார்த்து விடு!!
வாழ்வையும் ஒரு கை பார்த்து விடு!!
உன் புன்னகையில்,
துன்பங்களும் துவண்டு போகட்டும்,
சோதனைகளும் சோர்ந்து போகட்டும்!!
தோல்விகளையே வெற்றியின் பாதையாக்கு,
தடைகற்களையும் தாண்டி விடு!!
வாழ்வின் தூரம் கொஞ்சம்,
பாதையோ ஏராளம்!!
நம்பிக்கை எனும் பாதையில்,
புன்னகையை சூடிக்கொண்டு
வெற்றி நடையிடு!!
உன்னை தடுப்பார் எவர்?
அணையிடுவோர் எவர்?
உன்னை வெல்ல,
உன்னால் மட்டுமே முடியும் !!
நீ தோற்பதும்,
நம்பிக்கை தொலைத்த,
உன்னிடம் மட்டுமே!!
வாழ்வையும் ஒரு கை பார்த்து விடு!!
உன் புன்னகையில்,
துன்பங்களும் துவண்டு போகட்டும்,
சோதனைகளும் சோர்ந்து போகட்டும்!!
தோல்விகளையே வெற்றியின் பாதையாக்கு,
தடைகற்களையும் தாண்டி விடு!!
வாழ்வின் தூரம் கொஞ்சம்,
பாதையோ ஏராளம்!!
நம்பிக்கை எனும் பாதையில்,
புன்னகையை சூடிக்கொண்டு
வெற்றி நடையிடு!!
உன்னை தடுப்பார் எவர்?
அணையிடுவோர் எவர்?
உன்னை வெல்ல,
உன்னால் மட்டுமே முடியும் !!
நீ தோற்பதும்,
நம்பிக்கை தொலைத்த,
உன்னிடம் மட்டுமே!!