Thursday, June 22, 2017

அன்பின் அளவுகோல்!!

அன்பு செய்வீர்,
பிறர் பிழையை
மன்னித்து மறக்கும் அளவிற்கு!!
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி
பிறர் செயலை ஏற்கும் அளவிற்கு!!
வலிய ஏமாற்றங்களையும்
புன்னகையுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு!!
கோபம் கடந்த
அமைதி காணும் அளவிற்கு!!
ஆத்திரம் அகற்றி
ஆராய்ந்து உணரும் அளவிற்கு!!
சோக சுருக்கங்கள்
புன்னகையின் சாயலாய் மாறும் அளவிற்கு!!
எவரின் அன்போ அலட்சியமோ
நம்மை தீண்டாத அளவிற்கு!!
நம்மின் மகிழ்ச்சி
பிறரின் செய்கையால் அழிக்கமுடியாத அளவிற்கு!!
ஆம்,
தாமரை இலை நீர்த்துளி போல்,
சேர்ந்தே இருந்தாலும்,
மெல்லிய இடைவெளியும் வேண்டும்!!
நம் சுயத்தை  நாம் இழக்காமல் இருப்பதற்கு!!